பெனால்டியில் கோல் அடித்த ஜேர்மனியின் நட்சத்திர வீரர்: கனேடிய கிளப் அணி அபார வெற்றி
Thomas muller goal in penalty vancouver win: MLS போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கேசி அணியை வீழ்த்தியது.
கான்சாஸ் சிட்டியில் நடந்த MLS போட்டியில், வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கேசி அணியை வீழ்த்தியது.
பெனால்டி கோல்
வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் ஸ்போர்ட்டிங் அணிகளுக்கு இடையிலான MLS போட்டி கான்சாஸ் சிட்டியின் Children's Mercy Park மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார்.
அடுத்த 8 நிமிடங்களில் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்தார். அதற்கு பதில் கோல் அடிக்க ஸ்போர்ட்டிங் அணி திணறியது.
90வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸின் ரயான் எல்லோமி கோல் அடிக்க, வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.



| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |