புதிய சரித்திரம் படைத்த ஜேர்மனியின் மூத்த வீரர்! அபார வெற்றி பெற்ற Bayern Munich
உல்ஃப்ஸ்பர்க் அணிக்கு எதிரான போட்டியில் பாயர்ன் முனிச்சின் மூத்த வீரர் தாமஸ் முல்லர் புதிய சாதனை படைத்தார்.
Volkswagen Arena மைதானத்தில் பண்டஸ்லிகா தொடர் போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் உல்ஃப்ஸ்பர்க் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் பாயர்ன் முனிச் (Bayern Munich) வீரர் ஜமால் முசியாலா அபாரமாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 47வது நிமிடத்தில் உல்ஃப்ஸ்பர்க் (Wolfsburg) அணிக்கு பேனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட லாவ்ரோ மஜெர் கோல் (Lovro Majer) கோல் அடித்தார்.
அடுத்த 9 நிமிடங்களில் அவரே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால், உல்ஃப்ஸ்பர்க் வீரர் ஜாக்கப் காமின்ஸ்கி Own Goal (65வது நிமிடம்) அடித்ததால் ஆட்டம் சமநிலையானது.
பின்னர் 82வது நிமிடத்தில் பாயர்ன் வீரர் செர்கே ஞாப்ரே (Serge Gnabry) அபாரமாக கோல் அடிக்க, அதுவே அணியின் வெற்றி கோலாக மாறியது. இறுதியில் பாயர்ன் முனிச் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் உல்ஃப்ஸ்பர்க்கை வீழ்த்தியது.
இப்போட்டியில் ஜேர்மனியின் அணியின் மூத்த வீரரான தாமஸ் முல்லர், இரண்டாவது பாதியில் மாற்று வீரராக களமிறங்கினார். இது அவரது 474வது பண்டஸ்லிகா ஆட்டம் ஆகும்.
இதன்மூலம் பாயர்ன் முனிச் அணிக்காக அதிக பண்டஸ்லிகா போட்டிகளில் பங்கேற்ற கோல்கீப்பர் செப் மேயருடன் இடத்தை பகிர்ந்து வரலாற்று சாதனை படைத்தார்.
2008ஆம் ஆண்டில் இருந்து பாயர்ன் முனிச் அணியில் விளையாடி வரும் தாமஸ் முல்லர், 474 போட்டிகளில் 149 கோல்கள் அடித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |