300 கோல்கள்! புதிய வரலாறு படைத்த ஜேர்மனி வீரர்
ஜேர்மனியின் நட்சத்திர கால்பந்து வீரர் தாமஸ் முல்லர் தனது 300வது தொழில்முறை கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன் பட்டம்
தாமஸ் முல்லர் (Thomas Muller) பாயெர்ன் முனிச் கிளப் அணியில் இருந்து வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணிக்கு மாறினார்.
கனேடியன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் வான்கூவர் எப்சி அணிகள் மோதின.
இப்போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் வான்கூவர் எப்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
300வது கோல்
பெனால்டி வாய்ப்பில் தாமஸ் முல்லர் அடித்த கோல், தொழில்முறை கால்பந்து போட்டிகளில் அவரது 300வது கோல் ஆகும்.
மேலும், கனேடிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதன் மூலம், அதிக பட்டங்களை வென்ற ஜேர்மனி வீரர் எனும் வரலாறு படைத்தார்.
இதற்கு முன் க்ரூஸ் (Kroos) 34 பட்டங்களை வென்ற நிலையில் முல்லர் 35வது பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |