எம்பாப்பே ஆபத்தான வீரர்! அவரை தடுக்க..பாயர்ன் முனிச் நட்சத்திர வீரரின் திட்டம்
PSG அணி வீரர் கைலியன் எம்பாப்பேவை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என பாயர்ன் முனிச் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் கூறினார்.
பாயர்ன் முனிச் - பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மோதல்
ஜேர்மனியில் இன்று நடக்கும் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் மற்றும் பாயர்ன் முனிச் அணிகள் மோதுகின்றன. நெய்மர் இல்லாததால் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே அணியை முன்னெடுத்து செல்ல அதிக பொறுப்பை வகிக்க உள்ளனர்.
ஏற்கனவே PSG அணியை பாயர்ன் முனிச் வீழ்த்திய நிலையில், இன்றைய போட்டியில் அந்த அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
@Reuters
எம்பாப்பே குறித்து முல்லர் கருத்து
இந்த நிலையில், ஊடகத்திடம் பேசிய தாமஸ் முல்லர் போட்டி குறித்து கருத்து கூறினார். அப்போது அவர் எம்பாப்பே ஆபத்தான வீரர் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், 'கைலியன் எம்பாப்பே அவரது சுயவிவரத்தின் மூலம், தர்க்கரீதியாக ஒரு ஆபத்தை பிரதிபலிக்கிறார். PSG அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் அவர். அவரை எப்படி நிறுத்துவது என்று யோசிக்க வேண்டும், ஆனால் இது ஒரு குழு விளையாட்டு. உலகம் முழுவதும் எம்பாப்பே கால்பந்து விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறார்கள். எங்கள் திட்டம் பயனுள்ளதாக இருந்தால், அவரால் வேடிக்கையாக விளையாட முடியாது' என தெரிவித்தார்.