மின்னல் வேகத்தில் கோல் அடித்த தாமஸ் முல்லர்: வான்கூவர் வெற்றி (வீடியோ)
வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.
MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
தாமஸ் முல்லர்
வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் சால்ட் லேக் அணிகள் மோதிய MLS போட்டி அமெரிக்கா பர்ஸ்ட் ஃபீல்ட் மைதானத்தில் நடந்தது.
Too much space for Müller 🔥👊
— Vancouver Whitecaps FC (@WhitecapsFC) September 20, 2026
Diaby and Thomas find our second of the match 🤩#RSLvVAN | #RSL 0 - 2 #VAN pic.twitter.com/TUL0oTRJH0
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் வீரர் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜேர்மானிய நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) 29வது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் கோல் அடித்தார்.
வான்கூவர் வெற்றி
பின்னர் இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியில் யாடலி டையாபி கோல் அடித்தார்.
இறுதிவரை சால்ட் லேக் அணியால் கோல் அடிக்க முடியாததால், வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
