விநாயகரை தோப்புக்கரணம் போட்டு வழிபடுவது ஏன் தெரியுமா?
வினோதமான முக அமைப்பை, உருவங்களை உடைய நாயகன் விநாயகன் ஆவர்.
காலங்காலமாக விநாயகரை வணங்கும்போது தோப்புக்கரணம் போட்டு வணங்கவேண்டும் என்று கூறுவார்கள்.
தோப்புக்கரணம் என்றால் கைகளால் காதுகளைப் பற்றிக் கொண்டு, விநாயகர் முன் செய்யும் ஒருவகை வழிபாடு.
அந்தவகையில், விநாயகருக்கு ஏன் தோப்புக்கரணம் போட்டு வழிபடுகிறோம் என்று பார்க்கலாம்.
ஒருசமயம் விஷ்ணு அசந்து தூங்கிய போது அவரை எழுப்பி விட விநாயகர் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.
மருமகனான விநாயகரிடம் சக்கரத்தை வாங்கிட விஷ்ணு பகவானால் அதட்டி, மிரட்டி கேட்க முடியாது.
எனவே, விநாயகரிடமிருந்து அதை வாங்க மகாவிஷ்ணு இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு கீழும் மேலும் குதித்தார்.
வித்தியாசமான இந்தச் செயலைப் பார்த்த பாலவிநாயகர் விழுந்து விழுந்து சிரிக்க, சக்ராயுதம் வெளியே வந்து விழுந்தது.
மகாவிஷ்ணு மகிழ்வாக அதை எடுத்துக் கொண்டார்.
இதன் மூலம் விநாயகரை மகிழ்விக்க புது வழிபாட்டு முறையாக இதை நாம் பின்பற்றுகிறோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |