பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள் விலங்குகளாக பிறப்பார்கள்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
தனது வாக்குகளை விற்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் விலங்குகளாக பிறப்பார்கள் என்று பாஜக எம்எல்ஏ சர்ச்சையாக பேசியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், மோவ் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த உஷா தாகூர். இவர் முன்னாள் அமைச்சர் ஆவார்.
இந்நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், "பாஜக அரசின் பல திட்டங்களால் மக்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.
அவ்வாறு இருந்தும் தங்களது வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால், அது மனித குலத்துக்கு அவமானம் ஆகும். அதேபோல பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் ஒட்டகம், செம்மறி ஆடு, நாய், பூனை போன்ற விலங்குகளாக தான் பிறப்பார்கள்.
இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாக்களிப்பது ரகசியமாக இருந்தாலும் கடவுள் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னை நம்புங்கள்" என்றார். தற்போது இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |