பிரான்ஸ் அரசின் உயரிய விருதை பெறும் தமிழ் சினிமா பிரபலம்
கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசு செவாலியர் விருது அறிவித்துள்ளது.
தோட்டா தரணி
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் என இந்திய அளவில், பல்வேறு மொழிப் படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளவர் தோட்டா தரணி.

நாயகன், இந்தியன், தளபதி, சிவாஜி, சந்திரமுகி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு செட் அமைந்ததற்கு இவர் பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும், 2001 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
செவாலியர் விருது
தற்போது இவரின் திரையுலக சேவையை கௌரவிக்கும் வகையில், பிரான்ஸ் அரசு செவாலியர் விருதை அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் வரும் 13ம் திகதி ‘லா மேசான்’ என்ற நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்வின் போது, பிரான்ஸ் தூதரால் அந்த விருது வழங்கப்பட உள்ளது. இதனிடையே, அங்கு தரணியின் ஓவிய கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
செவாலியர் விருதை தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |