நியூ இங்கிலாந்தில் $400,000 மதிப்புடைய லாப்ஸ்டர்கள் திருட்டு: மர்ம கும்பல் கைவரிசை
நியூ இங்கிலாந்து பகுதியில் அதிநவீன முறையில் நடந்த கடல் உணவு திருட்டு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் உணவு பொருட்கள் திருட்டு
கடந்த சில வாரங்களாக நியூ இங்கிலாந்து பகுதியில் கடல் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமார் 40,000 சிப்பிகள்(Oysters), நண்டு இறைச்சிகள் $400,000 மதிப்புடைய லாப்ஸ்டர்கள்(Lobster) ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறிய வியாபாரிகளையும், விநியோக நிபுணர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நவம்பர் 22ம் திகதி Maine மாகாணத்தின் பால்மவுத் பகுதியில் இந்த திருட்டு சம்பவம் தொடங்கியுள்ளது.
காஸ்கோ பே பகுதியில் பண்ணையில் விற்பனைக்காக 14 கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த சிப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் மாசசூசெட்டின் டான்டன் பகுதியிலும் இரண்டு பெரிய திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

தந்திரமாக செயல்பட்ட திருடர்கள்
இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போலியான ஓட்டுநர் உரிமத்தை காண்பித்ததோடு, திருட்டு சம்பத்திற்கு பயன்படுத்திய லொறியின் பக்கவாட்டில் உண்மையான நிறுவனத்தின் பெயரை போலியாக ஒட்டு வந்துள்ளனர்.
மேலும் இதற்காக போலியான மின்னஞ்சல் முகவரியையும் மர்ம கும்பல் பயன்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |