கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஜெனீவா ஏரிக்குள் குதித்த ஆயிரக்கணக்கான சுவிஸ் நாட்டவர்கள்...
உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கானோர் ஜெனீவா ஏரிக்குள் குதித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
குளிரை பொருட்டாக எண்ணாமல் ஏரிக்குள் குதித்த மக்கள்
கடந்த சனிக்கிழமையன்று, சுமார் 1,500 சுவிஸ் நாட்டவர்கள் சூப்பர் ஹீரோக்கள் போல் உடையணிந்து ஜெனீவா ஏரிக்குள் குதித்தார்கள்.
ஆண்டுதோறும் ஜெனீவாவில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கோப்பை நீச்சல் போட்டிகளுக்காகத்தான் அவர்கள் ஏரிக்குள் குதித்தார்கள்.
Photo: Fabrice COFFRINI / AFP
தங்கள் சாதனையை தாங்களே முறியடிக்கும் நீச்சல் வீரர்கள்
இந்த நீச்சல் போட்டிக்காக சுமார் 4,000 பேர் முன்பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் 100 மீற்றர் தொலைவை 2 டிகிரி செல்ஷியஸ் குளிரில் நீந்திக் கடக்கவேண்டும்.
ஒரு நிமிடத்திற்குள் அவர்கள் அந்த தொலைவை நீந்திக் கடக்கவேண்டும். இதற்கு முந்தைய சாதனை 59.26 விநாடிகள் ஆக இருக்கும் நிலையில், இம்முறை அதற்கும் குறைவான நேரத்திலவர்கள் 100 மீற்றர் தொலைவை நீந்திக் கடந்தால் முந்தைய சாதனையை அவர்கள் முறியடிக்கலாம்.