ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வரக்கூடாது... லண்டனில் எழுந்துள்ள எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வரக்கூடாது என்று கூறும் புகார் மனுவில் லண்டனில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வரக்கூடாது...
ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரச்சாரத்துக்கு பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்கா சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானியா வருமாறு ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் அளித்த அழைப்பிதழை அவரிடம் கையளித்தார்.
ஆனால், ட்ரம்பின் பிரித்தானிய வருகையை எதிர்த்து சுமார் 50 புகார் மனுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, 50,000 கையெழுத்துக்களையும் பெற்றுவிட்டன.
undefined via Getty Images
இந்நிலையில், ட்ரம்ப் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஜனநாயகத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவரும், சட்டத்தையும் விதிகளையும் மதிக்காதவரும், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு கண்டனம் தெரிவிக்காதவருமான ட்ரம்பை நமது நாடாளுமன்றம் வரவேற்கக்கூடாது என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |