அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்... பிரான்ஸின் லியோனில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்

Emmanuel Macron Protest
By Arbin Feb 22, 2026 07:14 PM GMT
Report

தீவிர வலதுசாரி ஆர்வலர் குவென்டின் டெரான்க் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று பிரெஞ்சு நகரமான லியோனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தியுள்ளனர்.

பொதுமக்களுக்கு அழைப்பு

கடந்த வாரம் தீவிர இடதுசாரி ஆர்வலர்கள் எனக் கூறப்படுபவர்களால் குவென்டின் டெரான்க் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்... பிரான்ஸின் லியோனில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் | Thousands March In Lyon

இந்த நிலையில், தீவிர வலதுசாரி மற்றும் பாசிச எதிர்ப்பு குழுக்கள் இரண்டும் செறிந்து வாழும் லியோன் நகரில் நடைபெறும் பேரணி வன்முறையாக மாறக்கூடும் என்ற நிலை உருவானது.

இதனிடையே, பேரணி முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாக சனிக்கிழமை காலை பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அமைதி காக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்,

மொத்த மத்திய கிழக்கும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில்... அமெரிக்க தூதரின் பேச்சால் வெடித்த சர்ச்சை

மொத்த மத்திய கிழக்கும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில்... அமெரிக்க தூதரின் பேச்சால் வெடித்த சர்ச்சை

மேலும் அடுத்த வாரம் அனைத்து வன்முறைக் குழுக்கள் குறித்தும் அமைச்சர்களுடன் ஒரு சந்திப்பை நடத்துவதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில், 23 வயதான குவென்டின் டெரான்க் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்சின் சார்லி கிர்க் தருணம் என முன்னாள் பிரதமரான Dominique de Villepin குறிப்பிட்டுள்ளார்.

அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்... பிரான்ஸின் லியோனில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் | Thousands March In Lyon

தீவிர வலதுசாரி குழுக்கள்

கடந்த ஆண்டு அமெரிக்க கன்சர்வேட்டிவ் ஆர்வலரான சார்லி கிர்க் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையே பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பேரணியில் ஈடுபட்ட பலர் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு, குவென்டினுக்கு நீதி வேண்டும் என்றும் ஆன்டிஃபா படுகொலை எனவும் முழக்கமிட்டனர்.

குவென்டின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏழு பேர் மீது தற்போது முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக குவென்டின் டெரான்க் கொலை தொடர்பில் பேரணி முன்னெடுக்கப்படுவதை லியோன் மேயர் கிரிகோரி டூசெட் தடுக்க முயன்றார்.

அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்... பிரான்ஸின் லியோனில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் | Thousands March In Lyon

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தீவிர வலதுசாரி குழுக்கள் இந்த நிகழ்விற்காக லியோனுக்கு பயணிக்க வேண்டும் என்ற அழைப்புகள் குறித்து தாம் கவலைப்படுவதாகக் கூறினார். உள்ளூர் அதிகாரிகளின் தகவல்படி, லியோன் பேரணியில் சுமார் 3,200 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US