நெருங்கும் தேர்தல்... பிரான்ஸ் நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம்
பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பாரிஸ் மற்றும் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
National Rally-க்கு எதிராக
தீவிர வலதுசாரி கட்சியான National Rally-க்கு எதிராகவே மக்கள் குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஞாயிறன்று ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் National Rally கட்சி பெரும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ள நிலையிலேயே மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
பொலிசார் தெரிவிக்கையில், 350,000 மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கலாம் என்றும், 21,000 பொலிசார் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பாரிஸ் மட்டுமின்றி, Marseille, Toulouse, Lyon மற்றும் Lille உள்ளிட்ட நகரங்களில் குறைந்தது 150 பேரணிகள் முன்னெடுக்கப்படபாம் என்றே கூறப்படுகிறது.
பாரிஸ் நகரில் மட்டும் 75,000 மக்கள் திரண்டுள்ளனர். மேலும் பாரிஸ் நகரில் 7 பேர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 217,000 பேர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றே பொலிசார் கூறுகின்றனர்.
National Rally கட்சியின் Jordan Bardella நாட்டின் அடுத்த பிரதமராக வர வாய்ப்புள்ளது என்றும், அப்படியான பேரழிவை தடுத்து நிறுத்தவே இந்த மக்கள் போராட்டம் என்றும் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இனவாத பாரம்பரியத்தைக் கொண்ட
22 வயதேயான மாணவி ஒருவர் தெரிவிக்கையில், உண்மையிலேயே இனவாத பாரம்பரியத்தைக் கொண்ட National Rally கட்சியின் பொய்களை மக்கள் நம்புவது கவலையளிப்பதாக உள்ளது என்றார்.
மட்டுமின்றி, மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு நாட்டைப் பாதுகாக்க நாம் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட கருத்துக்கணிப்புகளில் National Rally கட்சி தேர்தலில் வென்று, ஆட்சியமைக்கும் நிலைக்கு வரும் என்றே தெரிய வந்துள்ளது. முதல் சுற்றில் National Rally கட்சிக்கு 33 சதவீத ஆதரவும் ஜனாதிபதி மேக்ரான் கட்சிக்கு 20 சதவிகித ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |