பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான நைஜர் நாட்டவர்கள்
நைஜர் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் ஒன்றின் முன் ஆயிரக்கணக்கான நைஜர் நாட்டவர்கள் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்சிக் கவிழ்ப்பு
கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 26ஆம் திகதி, நைஜர் நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது, ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoum கைது செய்யப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
உணவோ, மின்சாரமோ, மருந்துகளோ இல்லாமல் பல நாட்களாக அவர்கள் மோசமான நிலையில் சிறையில் வாடிவருகிறார்கள்.
பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு திரண்ட ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள்
இந்நிலையில், நேற்று, நைஜர் தலைநகர் Niameyக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு, ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
பிரான்ஸ் ஒழிக என்றும், ECOWAS ஒழிக என்றும் அவர்கள் முழக்கமிட்டார்கள். ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து பிரான்ஸ் நைஜர் நாட்டுக்கு அளித்துவந்த நிதியுதவிகளை நிறுத்திவிட்டது.
அத்துடன், Economic Community of West African States (ECOWAS) என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான அமைப்பு, நைஜர் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக படைகளை களமிறக்க ஒப்புதலளித்துள்ளது.
ECOWAS சுதந்திரமாக செயல்படவில்லை, அதை பிரான்ஸ் பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறி, பிரான்சுக்கும் ECOWAS அமைப்புக்கும் எதிராக நைஜர் நாட்டு ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |