பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 6000 தொழில் முனைவோர்
பிரித்தானியாவை விட்டு 6,000 தொழில் முனைவோர் வெளியேறியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
பிரித்தானியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 6,000 உயர் வளர்ச்சி வணிகங்களின் உரிமையாளர்கள் (owners of high-growth businesses) நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செல்வ மேலாண்மை நிறுவனம் Rathbones வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
2024 முதல் 2026 வரை Companies House பதிவுகளை ஆய்வு செய்ததில், அதிகமானோர் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொழில் முனைவோர் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவை தங்கள் புதிய தளமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

காரணம், பிரித்தானிய அரசு மேற்கொண்ட வரி மாற்றங்கள் என குறிப்பிடப்படுகின்றன.
குறிப்பாக, வணிக உரிமையாளர்களுக்கான புதிய வாரிசு வரி விதிமுறைகள், அதிகரிக்கப்பட்ட மூலதன இலாப வரி மற்றும் non-dom நிலை நீக்கம் ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
2025 ஏப்ரல் மாதம் முதல், நீண்டகாலமாக பிரித்தானியாவில் வசிக்கும் நபர்கள் உலகளாவிய வருமானம் மற்றும் இலாபங்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
பிரபல முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களும் இதில் அடங்குவர். Goldman Sachs துணைத் தலைவர் Richard Gnodde, Aston Villa இணை உரிமையாளர் Nassef Sawiris ஆகியோர் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
Rathbones நிறுவனத்தின் Michelle White கூறியதாவது: “இளம் தொழில் முனைவோர் அதிகமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, சிறந்த வாய்ப்புகள், சாதகமான வரி சூழல் மற்றும் நீண்டகால வளர்ச்சி நம்பிக்கையைத் தேடுகின்றனர்.”
கடந்த இரண்டு ஆண்டுகளில் 3,182 வணிக உரிமையாளர்கள் பிரித்தானியாவில் குடியேறியிருந்தாலும், மொத்தத்தில் 2,758 பேர் வெளியேறியதால், நாட்டில் தொழில் முனைவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும், 16,500 கோடீஸ்வரர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதால் 68.1 பில்லியன் பவுண்டு மதிப்பிலான முதலீட்டு செல்வம் இழந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK entrepreneurs leaving 2026, Thousands quit UK business owners, Wealth managers report UK exodus, UK tax changes impact entrepreneurs #UKBusiness #EntrepreneurExodus #TaxPolicy #UKEntrepreneurs