பிரான்ஸ் ஜனாதிபதியின் தெரிவு... போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான இடதுசாரிகள்
பிரான்சின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவு செய்துள்ளதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக மறுப்பை நிகழ்த்தியுள்ளதாக
கனசர்வேட்டிவ் அரசியல்வாதியைத் தெரிவு செய்திருப்பதன் மூலம் ஜனாதிபதி மேக்ரான் ஜனநாயக மறுப்பை நிகழ்த்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, 73 வயது மிஷல் பார்னியேர் (Michel Barnier) என்பவரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவு செய்திருந்தார்.
நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை எந்த கூட்டணியும் பெறாத நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் பிரதமர் பொறுப்புக்கு பார்னியேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே தீவிர இடதுசாரி கட்சியினர் சனிக்கிழமை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Les Républicains கட்சியை சேர்ந்த பார்னியேர், பிரான்சின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்.
நம்பிக்கையில்லா பிரேரணை
இவரது கட்சி 50க்கும் குறைவான எம்.பி.க்களுடன் தேர்தலில் கவனம் ஈர்த்தது. மட்டுமின்றி, தற்போதைய நாடாளுமன்றத்தில் நான்காவது பெரிய கட்சியாகவும் அறியப்படுகிறது.
பார்னியேர் பிரதமராக அறிவிக்கப்படும் முன்னர் NFP கட்சியானது பிரதமராக 37 வயது Lucie Castets என்பவரை தெரிவு செய்ய மறுத்தால், அந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என்று அச்சுறுத்தியது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 150 நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க LFI கட்சி அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டமானது அடுத்து பல வாரங்கள் அல்லது மாதங்களாக நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களின் ஒரு தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |