பிரான்சில் உயிர் பலி வாங்கிய புயல்... ஆயிரக்கணக்கானோர் புகலிடம் தேடி அலைந்த சம்பவம்
பிரான்சில் சனிக்கிழமை வீசிய புயலுக்கு பெண் ஒருவர் பலியாகியுள்ளார். Rouen என்ற நகரில், பெருவெள்ளத்தில் சிக்கிய காருக்கடியில் சிக்கிய அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நகர மேயர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பிரான்ஸ் பகுதிகள் சிலவற்றில் டென்னிஸ் பந்தைவிட பெரிய அளவில் வானிலிருந்து கொட்டிய ஆலங்கட்டி மழையால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவுக்கு திராட்சைத் தோட்டங்கள் நாசமடைந்துள்ளன.
நாடு முழுவதும், 5,000 வீடுகள் மின்தடை காரணமாக இருளில் மூழ்கியதாக மின்வழங்கல் நிறுவனமான Enedis தெரிவித்துள்ளது.
முகாம் ஒன்றிற்காக சென்றிருந்த இளைஞர்கள் சுமார் 10,000 பேர், பலத்த காற்றுடன் அடித்த மழை காரணமாக அடைக்கலம் தேடி ஓடும் ஒரு சூழல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.