தலைப்புச் செய்தியான பிரெஞ்சு நதியைச் சுற்றி ஆயிரக்கணக்கான பொலிசார் ராணுவ வீரர்கள் குவிப்பு
பிரான்சில் தலைப்புச் செய்தியான நதியைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான பொலிசாரும் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைப்புச் செய்தியான பிரெஞ்சு நதி
பிரான்சில் ஓடும் Seine நதி, கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகிவருகிறது.
முதல் காரணம், Seine நதியில், ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக Seine நதியை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்ப்பாளர்கள் அந்த நதியில் மலம் கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
நதியில் ஈ.கோலை மற்றும் எண்டிரோகாக்கை என்னும் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர், நதி சுத்தமாகத்தான் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக பாரீஸ் மேயரான Anne Hidalgo Seine நதியில் நீந்தினார்.
ஆயிரக்கணக்கான பொலிசார் ராணுவ வீரர்கள் குவிப்பு
இந்நிலையில், மீண்டும் Seine நதி தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆம், நதியைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான பொலிசாரும் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், Seine நதியிலும் பொலிசாரும் ராணுவ வீரர்களும் ரோந்துவருகிறார்கள்.
அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்ப் கொலை முயற்சி தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், இம்மாதம், அதாவது, ஜூலை 26ஆம் திகதி Seine நதியில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நடைபெற உள்ளதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக, நவீன உபகரணங்களுடன், 45,000 பொலிசாரும், 10,000 ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |