ட்ரம்ப் மனைவி மெலானியாவை நாடுகடத்தவேண்டும்: ஆயிரக்கணக்கானோர் புகார் மனுவில் கையெழுத்து
புலம்பெயர்தல் தொடர்பில் கண்மூடித்தனமாக நடவடிக்கைகள் எடுத்துவருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
இந்நிலையில், ட்ரம்ப் மனைவியான மெலானியா முதலான அவரது குடும்பத்தினரை நாடுகடத்தவேண்டும் என்று கோரும் புகார் மனு ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுவருகிறார்கள்.
ட்ரம்ப் மனைவி மெலானியாவை நாடுகடத்தவேண்டும்
அமெரிக்க குடியுரிமை பெற்ற வேறு நாட்டவர்களை நாடுகடத்த விரும்புகிறார் ட்ரம்ப். அப்படியானால், வேறு நாட்டவரான மெலானியா ட்ரம்ப், அவரது பெற்றோர் மற்றும் மகனையும் நாடுகடத்துவதுதான் நியாயம் என்கிறது அந்த புகார் மனு.
உங்கள் தாய் வேண்டுமானால் அமெரிக்காவில் பிறந்திருக்கலாம். ஆனால், மெலானியின் தாய் வேறு நாட்டில் பிறந்தவர்.
வேறு நாட்டில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் நாடுகடத்தப்படவேண்டுமானால், முதலில் உங்கள் மனைவியைத்தான் முதல் படகில் அல்லது விமானத்தில் நாடுகடத்தவேண்டும் என்கிறது அந்த புகார் மனு.
ட்ரம்பின் மனைவியான மெலானியா, ஸ்லோவேனியா நாட்டில் பிறந்தவர் ஆவார். 1996ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த மெலானியா, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |