சுவிட்சர்லாந்தில் 1000-க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிப்பு! இராணுவ செய்தித் தொடர்பாளர் அதிர்ச்சி தகவல்
சுவிட்சர்லாந்தில் கடந்த ஓராண்டில் மட்டும் அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை முந்தை ஆண்டை விட 60 சதவீதம் அதிகம் என இராணுவம் கூறுவது கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது.
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு கோவிட் -19 பெருந்தொற்றுக்கு மத்தியில், மலைகளில் அதிகமான நடைபயணிகள் மற்றும் நடைபயிற்சி செய்பவர்கள் சில வெளிப்புற நடவடிக்கைகளில் (Outdoor Activities) அதிகமாக ஈடுபட்டனர்.
இதில் ஒரு நன்மையாக, சுமார் 1,055 வெடிக்காத பழைய வெடிபொருட்கள், குண்டுகள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டன என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் Stefan Hofer இன்று (புதன்கிழமை) SRF ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
Picture: Keystone / Gian Ehrenzeller
வெளியிடங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் மக்கள் கோவிட் பொது முடக்கத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அவர்களின் கேரேஜ்கள் மற்றும் வீட்டு நிலங்களை சுத்தம் செய்தபோது, ஏராளமான பயன்படுத்தப்படாத குண்டுகள் அல்லது வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாக அவர் கூறினார்.
தகவல்களின்படி, இந்த 2021-ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மாத இறுதிவரை மட்டும் 600 வெடிக்காத குண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இது இந்த இடைப்பட்ட காலத்தில் மிக அதிகமான எண்ணிக்கை என்று இராணுவம் கருதுகிறது.
ஜேர்மனியை போல், சுவிட்சர்லாந்தின் கிராமப்புறங்களில் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லை என்றாலும், ராணுவப் பயிற்சியில் இருந்து தவறான அல்லது வெடிக்காத குண்டுகள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன.
பல ஆண்டுகள் ஆனாலும், அவை ஆபத்தானவை. இதுபோன்ற பொருட்களை ஒருபோதும் தொடக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்: பொலிசாருக்குத் தெரிவிக்கும் முன் இருப்பிடத்தைக் குறித்துக் கொள்ளுங்கள், பின்னர் அவர்கள் இராணுவ நிபுணர்களைத் தொடர்புகொள்வார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
விபத்தைத் தவிர்க்க உதவும் வகையில் இதுபோன்று வெடிபொருட்களை கண்டுபிடித்து இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் பொதுமக்களுக்கு சுவிட்சர்லாந்தில் போனஸ் வழங்கப்படுகிறது; கடந்த ஆண்டு இதுபோல் CHF8,800 ($9,580) பணம் போனஸாக வழங்கப்பட்டுள்ளது.