போலி துவாரகா வீடியோ திட்டமிடப்பட்ட நாடகம்! தடாலடியாக கூறும் தோழர் தியாகு
துவாரகா எனும் பெயரில் பெண் பேசிய வீடியோ திட்டமிட்ட நாடகம் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மாவீரர் நாளில் துவாரகா எனக் கூறிக்கொண்டு பெண்ணொருவர் பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பியது.
பல தரப்பினர் அது போலியானது என்றும், அப்பெண் துவாரகா இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தோழர் தியாகுவும் குறித்த பெண் போலியானவர் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டிலும் மாவீரர் நாள் வெளிப்படையாக நிகழ்த்தப்பட்டது, நானும் அதில் கலந்துகொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தடை இல்லாத ஐரோப்பிய நாடுகளில் இது ஏன் வெளிப்படையாக நடத்தப்படவில்லை? அதில் இருந்தே இந்த விடயத்தில் கள்ளத்தனம் இருப்பது தெரிகிறது என்றார்.
அத்துடன் நேரலை என்று அறிவித்துவிட்டு பதிவு செய்து வீடியோவை வெளியிட்டது ஐயத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போது வெளியிடப்பட்ட வீடியோ போலியானது என்றும், எந்த அமைப்பினர் இந்த நிகழ்வை நடத்தினர் என்றும் தோழர் தியாகு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |