அடிவாங்கும் ட்விட்டர் ட்ராஃபிக்., 5 நாட்களில் Threads-ல் 100 மில்லியன் பயனர்கள்!
ஒரு வாரத்திற்குள் 100 மில்லியன் பயனர்களைப் பெற்று வசதியுள்ளது புதிய Threads செயலி.
100 மில்லியன் பயனர்கள்
அறிமுகமான ஐந்தே நாட்களில் 100 மில்லியன் பயனர்களை தாண்டி மெட்டாவின் இந்த புதிய Threads ஆப் மக்களை ஈர்த்துவருகிறது.
இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைப்பதன் மூலம் த்ரெட்ஸ் செயலி செயல்படுகிறது. நாளுக்கு நாள் இந்த செயலியில் பதிவு செய்யும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
mpost
இரண்டு மணி நேரத்தில் இந்த ஆப்-ஐ இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்தனர்.
அடிவாங்கும் ட்விட்டர் ட்ராஃபிக்
2.35 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராமுடன் இணைந்திருப்பதால் த்ரெட்ஸ் இவ்வளவு பயனர்களைப் பெற முடிந்தது என்று அறிக்கைகள் வெளிவருகின்றன.
எவ்வாறாயினும், இந்த புதிய ஆப்பின் காரணமாக ட்விட்டரில் ட்ராஃபிக் அடிவாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இது ட்விட்டர் போன்ற ஒரு ஆப் என்று கூறினாலும், த்ரெட்ஸ் ட்விட்டரின் பல அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை.
த்ரெட்ஸில் இருக்கும் சிக்கல்கள்
அதேபோல், Android-ல் உள்ள Threads ஆப்ஸின் பீட்டா பதிப்பை Google Play Store மூலம் சோதிக்க முடியாது.
மற்றொரு சிக்கல் என்னவென்றால், த்ரெட்ஸ் செயலியை நீக்குவது, இன்ஸ்டாகிராமுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இன்ஸ்டாகிராம் கணக்கையும் இழக்கவேண்டியிருக்கும்.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொஸ்ஸெரியின் கூற்றுப்படி, பயனர்கள் தங்கள் த்ரெட்ஸ் கணக்கையும் இன்ஸ்டாகிராம் கணக்கையும் பிரிக்க நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்த புதிய ஆப்பிற்கு அதிக எண்ணிக்கையிலான பயனர்களைப் பதிவு செய்துவருகின்றனர், ஆனால் எத்தனை பேர் இந்த செயலியுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Threads, Problem in Threads, Twitter, 100 million users, Apps, Meta