தப்பிச்சுருங்க.. விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்! பிரித்தானியா அமைச்சர் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் முயற்சியில் காபூல் விமான நிலையத்தில் கூடியிருப்பவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ‘மிகவும் நம்பகமான’ உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது என்று பிரித்தானியா ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி எச்சரித்துள்ளார்.
காபுல் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று புதன்கிழமை பிரித்தானியா வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தற்கொலை தாக்குதல்கள் நடத்தலாம் என உளவுத்துறையிடமிருந்து மிகவும் உறுதியானது தகவல் கிடைத்திருப்பதாக ஹெப்பி உறுதிப்படுத்தினார்.
காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் உடனடியாக தாக்குதல் நடத்தலாம் என மிகவும் நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு வரக்கூடாது, அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் மற்றும் மேலதிக அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்க வேண்டும்.
விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக மேற்கத்திய நாடுகள் தலிபான்களை நம்பியுள்ளதாகவும், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் ஏராளமான மக்கள் இன்னும் அங்கு காத்திருக்கின்றனர்.
அங்கு இருப்பவர்களைப் பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று ஹெப்பி கூறியுள்ளார்.