தனக்கு எழுதிய கடிதங்களையும் புகைப்படங்களையும் வெளியிடுவதாக அமைச்சரை மிரட்டிய பெண்... சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள புதிய பிரச்சினை
சுவிஸ் உள்துறை அமைச்சர் தனக்கு எழுதிய கடிதங்களையும் அவருடன் தொடர்புடைய சில புகைப்படங்களையும் வெளியிட இருப்பதாக மிரட்டிய ஒரு இளம்பெண், அவற்றை வெளியிடாமல் இருக்கவேண்டுமானால் தனக்கு 100,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்கவேண்டும் என்று ப்ளாக் மெயில் செய்துள்ளார்.
சுவிஸ் உள்துறை அமைச்சரான Alain Bersetஇன் முன்னாள் கதலியான ஒரு பெண் இந்த பிளாக் மெயில் சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது Berset புகாரளித்துள்ளார்.
அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், தனது தனிப்பட்ட புகார் குறித்து நடவடிக்கை எடுக்க, Berset தனது பதவியையும், அரசு அதிகாரிகளையும் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சகத்தில் செகரட்டரி ஜெனரல் என்னும் பெரும் பொறுப்பிலிருப்பவரை இந்த வழக்கைக் கையாளச் சொன்ன Berset, அந்த பெண்ணைக் கைது செய்வதற்கு, அபாய ஆபரேஷன்களைக் கையாளும் ஒரு பொலிஸ் பிரிவை பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் பத்திரிகை ஒன்றில் வெளியானதைத் தொடர்ந்து, Berset நாடாளுமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார்.
Bersetஇன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கு தவறாக கையாளப்பட்டதா, அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பது போன்ற விடயங்கள் குறித்து நாடாளுமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.