இந்த நாட்டிலிருந்து தான் நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது! உண்மையை போட்டுடைத்த பாகிஸ்தான் அமைச்சர்
நியூசிலாந்து அணிக்கு எங்கிருந்து அச்சுறுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்பதை பாகிஸ்தான் தகவல் அமைச்சர் Fawad Chaudhry வெளிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி பாகிஸ்தான் உடனான ஒரு நாள் தொடரை ரத்து செய்து, நியூசிலாந்து அணி நாடு திரும்பிய விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் Fawad Chaudhry, உள்துறை அமைச்சர் Sheikh Rasheed செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர்.
தகவல் அமைச்சர் Fawad Chaudhry கூறியதாவது, நியூசிலாந்துக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இந்த மின்னஞ்சல் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல் சிங்கப்பூர் இருப்பிடத்தைக் காட்டும் வகையில் VPN மூலம் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என Fawad Chaudhry கூறினார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் இண்டீஸ் அணிக்கும் அச்சுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் அது போலியானது என Fawad Chaudhry கூறினார்.
பாகிஸ்தான் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.