சுவிட்சர்லாந்தில் கொரோனா சான்றிதழ் மோசடி
குறிப்பிட்ட சில நாடுகள் வெளிநாட்டு பயணிகளிடம் கொரோனா சான்றிதழ் கோரும் நிலையில், தற்போது விஷமிகள் சிலர் அதில் போலிகளை தயாரித்து மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும், கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 180 நாட்களில் குணமடைந்தவர்களுக்கும், பரிசோதனைக்கு உட்பட்டு கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் சுவிஸ் அரசாங்கம் சான்றிதழ் ஒன்றை அளிக்கின்றனர்.
குறித்த சான்றிதழலானது காகித வடிவிலும், மொபைல் செயலிகள் வாயிலாக பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
விமான பயணங்களுக்கு குறித்த சான்றிதழ்கள் கட்டாயம் என்ற நிலையில், அதன் தேவையும் அதிகரித்துள்ளது.
ஆனால் பலபேர் PCR சோதனைகளுக்கு தயாராகாததுடன், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் மறுத்து வரும் காரணத்தால், வெளிநாடு செல்ல முடியாமல் போகின்றது.
இந்த நிலையிலேயே, போலிகளை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் குற்றவியல் சட்டப் பிரிவு 251ன் படி இவ்வாறு போலி சான்றிதழ்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் தயாரித்து வழங்குபவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள்.
அதிகபட்சமாக இவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைவாசமும் அல்லது பிழையும் விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா சான்றிதழ்களை போலியாக தயாரித்தும் பயன்படுத்தவில்லை என்றாலும் சட்டப்படி குற்றமாகும்.
இதனால் பொதுமக்கள் இந்த விடயத்தில் கவனமுடன் செயல்பட சுகாதாரத்துறை கோரிக்கை வைத்துள்ளது.