சுவிஸ் சிறுமி விவகாரம்... நாட்டை விட்டு வெளியேற்றப்படும் ஆப்கான் இளைஞர்
சுவிட்சர்லாந்தில் சிறுமியின் ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொண்ட ஆப்கான் இளைஞர் தற்போது நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
துர்காவ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியும் ஆப்கான் நாட்டவரான 22 வயது இளைஞரும் 2019ல் சமூக ஊடகம் வாயிலாக நட்பாகியுள்ளனர். இருவரும் ஒருகட்டத்தில் நேரிடையாக சந்தித்துக்கொள்ள முடிவான நிலையில், அப்போது 22 வயதான ஆப்கான் இளைஞர் தமக்கு 19 வயது என கூறியுள்ளார்.
இருப்பினும் இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகியுள்ளனர். தொடர்ந்து St. Gallen பகுதியில் சந்தித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். சந்திப்புக்கு முன்னர், இருவரும் உடல் உறவு தொடர்பில் விவாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, தமது தோழிக்கு வெறும் 13 வயது மட்டுமே என்பதிலும் அவர் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளலாம் என முடிவெடுத்த பின்னர் முதல் சந்திப்பில் இருவரும் முத்தமிட்டு கொண்டுள்ளனர்.
ஆனால் மூன்றாவது சந்திப்பிலேயே இருவரும் உறவு வைத்துக் கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு பின்னர் அந்த ஆப்கான் இளைஞரை தொடர்பு கொண்ட சுவிஸ் சிறுமி, எந்த ஆணுறை வாங்கட்டும் என கேட்டுள்ளார்.
தொடர்ந்து இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டுள்ளதுடன், ஆப்கான் இளைஞரின் குடியிருப்பிலேயே உறவும் வைத்துக் கொண்டுள்ளனர். இவர்களின் சந்திப்பும் உறவு வைத்துக் கொள்வதும் பலமுறை தொடர்ந்துள்ளது.
ஆனால் இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளான நிலையில், ஆப்கான் இளைஞர் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 9 மாதங்கள் நிபந்தனைகளுடன் கூடிய சிறை தண்டனையும் 300 பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டது.
மட்டுமின்றி, 5 ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேறவும் தீர்ப்பானது. தற்போதைய சூழலில் குறித்த இளைஞரை நாட்டை விட்டு வெளியேற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.