நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது
Three arrested in rajasthan firing tiger shroff: இந்தியாவின் ராஜஸ்தானில் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.
நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டனர்.
டைகர் ஷெராஃப்
மும்பையின் ஜுஹு பகுதியில், நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராஃப் காயங்களுடன் உயிர்தப்பிக்க, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை பிடிக்க தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டன.
மூவர் கைது
இந்த நிலையில், மும்பை காவல்துறை ரயில்வே காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் மூவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்கள், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கைது செய்யப்பட அவர்கள் குறித்த விபரம் தெரிய வந்துள்ளது.
கைதானவர்கள் ஹரியானாவைச் சேர்ந்த பூல் சிங், ரேஹான் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஹிருத்திக் குமார் என்றும், அவர்களில் ஒருவர் வாகன ஓட்டுநர் என்றும் தெரிய வந்துள்ளது.
