மனைவியை இழந்த நபர் புத்தாண்டு தினத்தன்று எடுத்த அதிர்ச்சி முடிவு
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில், நபர் ஒருவர் புத்தாண்டு தினத்தன்று தன் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி
ஆந்திராவிலுள்ள நந்தியால் மாவட்டத்தில், ஜனவரி மாதம் 1ஆம் திகதி, தன் பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வந்துள்ளார் ஒரு பெண்மணி.
நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால், ஒரு சிறிய இடைவெளி வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்த அவர், அங்கு தன் மகனுடைய உடல் மின்விசிறியிலிருந்து தொங்கிகொண்டிருப்பதைக் கண்டு அதிர்சியடைந்து சத்தமிட்டுள்ளார்.
உடனடியாக அங்கு பொலிசார் விரைய, வீட்டுக்குள் அந்தப் பெண்மணியின் மகனும், முறையே 7 மற்றும் 4 வயதுடைய அவரது பேத்திகளும், 2 வயதுடைய பேரனும் இறந்துகிடப்பதைக் கண்டுள்ளனர்.

அந்த 35 வயது நபருடைய மனைவியான 32 வயதுப் பெண், ஆகத்து மாதம் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவியை இழந்து தனிமையாக பிள்ளைகளை வளர்க்க இயலாததால், அவர் இந்த துயர முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
அதிகாலை 1.00 மணி வரை தன் நண்பர்கள் பலரை மொபைலில் அழைத்து அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, பின் தன் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் அவர்.
புத்தாண்டு தினத்தன்று, ஒரு குடும்பமே இப்படி ஒரு துரதிர்ஷ்ட முடிவை சந்தித்த விடயம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.