பிரித்தானியாவில் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொலிசார் செய்த செயல்! அதிரடியாக விதிக்கப்பட்ட அபராதம்
பிரித்தானியாவில் கொரோனா விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்ட மூன்று பொலிசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் குறைந்து வருவதால், அங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு சில விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,கொரோனாவின் மூன்றாவது அலை பாதிப்பில் இருந்து நாம் தபிக்க வேண்டும் என்று அரசு அவ்வப்போது எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை Shetland-ல் இருக்கும் Lerwick நகரில் 6 பேருக்கு கொரோனா விதிமுறைகளை மீறியதாக பராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று காவல் துறை அதிகாரிகள் இருந்துள்ளனர்.
இவர்கள் உட்புற விருந்து வைத்து, அவர்கள் உட்பட 6 பேரை அழைத்து கொண்டாடியுள்ளனர். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொலிசாரே இப்படி செய்ததால், அவர்கள் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொரோனா கண்காணிப்பாளர் மேகி பெட்டிக்ரூ என்பவர் கூறுகையில், Shetland-ல் உள்ள பெரும்பான்மையான மக்கள் கொரோனா வைரஸின் பரவலை அடக்குவதற்கான விதிகளை பின்பற்றி வருகின்றனர்.
இதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், வெள்ளிக்கிழமை விதிமுறைகளை மீறி நடைபெற்ற உட்புற விருந்து நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டது மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் இந்த விருந்தில் கலந்து கொண்ட 6 பேருக்கும் பொலிசார் உட்பட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகள் இப்படி செய்யலாமா? இது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக கூறினார்.