எங்கள் மகள்களை இழந்தோம்... பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை நாடிய மூன்று தந்தையர்
பிரித்தானியாவில் திடீரென்று தற்கொலை செய்துகொண்ட மூன்று இளம் பெண்களின் தந்தையர்கள், பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து நடவடிக்கை தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் ரிஷி சுனக்குடன் சந்திப்பு
பிரித்தானியாவின் நார்ஃபோக் பகுதியை சேர்ந்த டிம் ஓவன் தமது மகள் எந்த காரணமும் இன்றி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
@judeedginton
2020 மார்ச் மாதம், பிரித்தானியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டுவரும் நிலையில், திடீரென்று ஒருநாள் வீட்டில் இருந்து வெளியே சென்ற எமிலி ஓவன் அதன் பின்னர் திரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள தந்தை,
சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்ததாகவும், ஆனால் அவர் அப்போது இறந்திருந்தார் எனால் டிம் ஓவன் தெரிவித்துள்ளார். மகளின் பிரிவில் இருந்து இதுவரை விடுபடாத டிம், தமது மகள் தற்கொலை செய்துகொண்டதன் காரணம் தெரியாமல் தவித்து வருகிறார்.
@dailymail
இந்த நிலையில் தான் கடந்த மாதம் பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்த டிம் ஓவன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். பிரித்தானியாவில் 35 வயதுக்கு உட்பட்ட நபர்களில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டு வருகிறது.
சராசரியாக 5 இளையோர்கள் தற்கொலை
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நாளாந்தம் சராசரியாக 5 இளையோர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, பல சம்பவங்களில் தொடர்புடைய இறப்பை தவிர்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிம் ஓவன் மட்டுமின்றி தெற்கு மான்செஸ்டர் பகுதியில் குடியிருக்கும் 58 வயதான மைக் பால்மர், கும்ப்ரியாவில் மோர்லாண்ட் பகுதியில் வசித்துவரும் 62 வயதான Andy Airey ஆகிய மூவருமே தற்போது அமைப்பு ஒன்றை உருவாக்கி, தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
@dailymail
எமிலி ஓவன் தற்கொலை செய்துகொண்ட 6 நாட்களுக்கு பின்னர் மைக் பால்மரின் மகள் 17 வயதேயான பெத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஊரடங்கு நடவடிக்கைகளை மிகவும் வெறுப்பதாக கூறி வந்த பெத், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்படுவார் என கனவிலும் கருதவில்லை என மைக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஆண்டி ஏரேவின் மகள் 2018ல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். செவிலியராக பணியாற்றி வந்துள்ள 29 வயது சோஃபி, தற்கொலை செய்துகொள்வதற்கும் 3 மாதங்கள் முன்னர் அவரது கணவரிடம் இருந்து பிரிந்துள்ளார்.
600 மைல்கள் மூவரும் நடந்துள்ளனர்
புதிய வேலை, ஜனவரியில் புதிய குடியிருப்புக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், சோஃபி தற்கொலை செய்து கொண்டதம் உண்மையான காரணம் இதுவரை தங்களால் கண்டறிய முடியவில்லை என ஆண்டி ஏரே குடும்பம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த மூன்று தந்தையர்களும் இணைந்து தாங்கள் உருவாக்கியுள்ள தற்கொலைக்கு எதிரான அமைப்பிற்காக 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் சேகரித்துள்ளனர். நிக்கோல் கிட்மேன் மற்றும் டேனியல் கிரெய்க் ஆகிய இரு பிரபல நடிகர்களும் தலா 10,000 பவுண்டுகள் நன்கொடையாக அளித்துள்ளனர்.
@PA
கடந்த ஆண்டு மட்டும் தற்கொலைக்கு எதிரான பரப்புரையை முன்னெடுக்கும் பொருட்டு எடின்பர்க், பெல்ஃபாஸ்ட், கார்டிஃப் மற்றும் லண்டனில் உள்ள நான்கு இங்கிலாந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடையே, 600 மைல்கள் மூவரும் நடந்துள்ளனர்.
மேலும் தற்போது தற்கொலைத் தடுப்புப் பாடங்களை பள்ளிப் பாடத்திட்டத்தின் கட்டாயப் பகுதியாக மாற்றுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.