உளவு பார்த்ததாக லண்டனில் வெளிநாட்டவர்கள் மூவர் கைது
லண்டனில் பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூன்று ஈரானியர்கள் மீது சொந்த நாட்டிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
தொடர்புடைய மூவரும் ஆகஸ்ட் 14, 2024 முதல் பிப்ரவரி 16, 2025 வரை மத்திய கிழக்கு நாட்டின் உளவுத்துறைக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
39 வயதான Mostafa Sepahvand, 44 வயதான Farhad Javadi Manesh மற்றும் 55 வயதான Shapoor Qalehali Khani Noori ஆகிய மூவருமே மே 3ம் திகதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.
இந்த விவகாரம் தொடர்பில் கமாண்டர் டொமினிக் மர்பி தெரிவிக்கையில், இவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள், இவை மிகவும் சிக்கலான மற்றும் விரைவான விசாரணையை அடுத்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அரசு ஆதரவு சதித்திட்டங்கள்
இரண்டு வாரங்களுக்கு முன்பு இவர்கள் கைது செய்யப்பட்டதிலிருந்து, விசாரணை அதிகாரிகள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர், மேலும் இந்த நிலையை அடைய CPS இல் உள்ள சக ஊழியர்களுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளோம் என்றார்.
இவர்களுடன் 31 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மே 15ம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 முதல் பிரித்தானியாவில் ஈரான் முன்னெடுத்த 20 அரசு ஆதரவு சதித்திட்டங்களை அதிகாரிகள் முறியடித்துள்ளதாக MI5 தலைவர் Ken McCallum கடந்த அக்டோபரில் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |