ஆங்கிலக்கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து: புலம்பெயர்வோர் மூன்று பேர் பலி
நேற்று ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்வோர் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில், மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
புலம்பெயர்வோர் மூன்று பேர் பலி
நேற்று புதன்கிழமை, பிரான்சிலுள்ள Sangatte என்னுமிடத்திலிருந்து 48 புலம்பெயர்வோருடன் சிறு படகொன்று பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் அந்த படகு கவிழ, பிரான்சின் Calais துறைமுகத்திலிருந்து மீட்புப் படகொன்று அந்த இடத்துக்கு விரைந்துள்ளது.
தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்க, அவர்களில் இரண்டுபேர் சுயநினைவின்றிக் கிடந்துள்ளார்கள்.
Image: AFP via Getty Images
உடனடியாக அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்கப்பட்டும், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இது நடந்து மூன்று மணி நேரத்துக்குப் பின், ஒருவர் தண்ணீரில் சுயநினைவின்றிக் கிடப்பதைக் கண்ட அயர்லாந்து படகொன்று அளித்த தகவலின்பேரில், பிரெஞ்சு கடற்படை ஹெலிகொப்டர் ஒன்று அவரை மீட்க, அவரும் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், அதிகபட்சமாக 12 பேர் பயணிக்கவேண்டிய சிறுபடகொன்றில் 48 பேர் பயணித்துள்ளார்கள். ஆகவேதான் அந்த படகு கவிழ்ந்துள்ளது, மூன்று பேர் உயிரையும் பலிவாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Image: AFP via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |