CSK-வின் புதிய ஜெர்சியில் புதிதாக இருக்கும் மூன்று ஸ்டார்கள்! எதற்காக தெரியுமா?
சென்னை அணியின் புதிய ஜெர்சியின் முன்புறத்தில் மூன்று ஸ்டார்கள் என்ன காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், நடைபெறும் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணியினரும் இப்போதே பயிற்சியை துவங்கிவிட்டனர்.
குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் டோனி, சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், நேற்று டோனி சென்னை அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தினார்.
அதில், புதிய ஸ்பான்சர் நிறுவனமான மிந்தராவின் பெயர் குறிப்பிட்டிருந்ததுடன், ஜெர்சியில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.
புதிய ஜெர்ஸியின் இரண்டு தோள்பட்டை பகுதியிலும் இராணுவத்தின் கேமொபிளாஜ் சின்னம் இருக்கிறது. இது இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோக்கு மேல் 3 ஸ்டார்கள் குறிப்பிட்டிருந்தது. இந்த மூன்று ஸ்டார்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற ஐபிஎல் கோப்பைள் ஆகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது. இதனை நினைவுகூறும் வகையில் தான் அந்த ஸ்டார்களை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
