நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண் கொல்லப்பட்ட விவகாரம்! வெளியான அடுத்தக்கட்ட தகவல்
நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் உடல் நசுக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி. இவர் நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் ஆவார்.
இவரது கணவர் விஷ்ணு பிரகாஷ், அமெரிக்க மாப்பிள்ளை. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கணவனுடன் ஜெயபாரதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏதோ பிரச்சனை வந்துள்ளது.
இதையடுத்து 3 வருடத்துக்கு முன்பு, சண்டை போட்டுக் கொண்டு அமெரிக்காவில் இருந்து, திருவாரூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் ஒருநாள் வீட்டுக்கு வேலை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வேன் ஒன்று ஜெயபாரதி மீது மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இந்த விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். சந்தானமும் இது தொடர்பில் பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்தார்.
அப்போதுதான் விசாரணையில் சந்தேகப்பட்டபடியே இது கொலை என்று தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்களும் சிக்கியது.
தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், அடிக்கடி தகராறும் இருந்து வந்துள்ளது.. அப்போது "அம்மா வீட்டுக்கு போ" என்று கணவர்தான் துரத்தி விட்டுள்ளார்.. இதனால், விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்த ஜெயபாரதி, விஷ்ணுபிரகாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதனால், விஷ்ணுபிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது... இதுதான் விஷ்ணுபிரசாத்துக்கு ஆத்திரத்தை கிளப்பி, ஜெயபாரதியை கொல்லவும் முடிவு செய்ய காரணமாக இருந்துள்ளது.
தன்னுடைய சொந்தக்காரர்கள் ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால், கேஸை முடித்துவிடுவார்கள் என்று எண்ணி, பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்து வாங்கி உள்ளனர்.
பிரசன்னா என்பவரை டிரைவராக வேலைக்கு வைத்துள்ளனர். பிறகுதான் வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு ஜெயபாரதி வந்து கொண்டிருக்கும்போது, பலமாக மோதியதுடன், அங்கிருந்த ஒரு பனைமரத்துடன் ஜெயபாரதியின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொண்டே இருந்துள்ளார்.
இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, டிரைவர் பிரசன்னாவை பொலிசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த ராஜா, ஜெகன், ஆகியோர் எஸ்கேப் ஆகி இருந்ததால், அவர்களையும் கைது செய்திருந்தனர். தற்போது, தீவிரமான முயற்சிக்கு பிறகு, செந்தில்குமாரை கைது செய்துள்ளனர்.
இந்த கொலையில் இவர்தான் மூளையாக செயல்பட்டவர்.. இவர் விஷ்ணுபிரகாஷின் மைத்துனர் ஆவார்.
சமீப காலமாக இவர் கொரோனா சிகிச்சையில் இருந்தால், போலீசாரால் கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.. இப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதால், அவரை கைது செய்தனர் நடவடிக்கை மேலும் அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபிரகாஷையும் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.