ஜேர்மனியில் மூன்று பேர் கொடூர கொலை... மாயமான நபரைத் தேடிய பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஜேர்மன் நகரமொன்றில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலுள்ள தோட்டத்தில் மாலை 5.00 மணியளவில் ஒருவர் படுகாயமடைந்து கிடப்பதைக் கண்ட பெண் ஒருவர் பொலிசாருக்குத் தகவலளித்தார்.
கொலையாளியை வலைவீசித் தேடத்துவங்கிய பொலிசார்.
ஜேர்மனியிலுள்ள Weilheim நகரில் தோட்டம் ஒன்றில் படுகாயமடைந்து கிடந்த அந்த 60 வயது நபரை மீட்க மருத்துவ உதவிக்குழுவினர் எடுத்த முயற்சி பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
அவரைக் கொலை செய்த நபரை பொலிசார் தீவிரமாகத் தேடத் துவங்கினார்கள்.
அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி
மாலை 7.15 மணியளவில், Holzhofstrasse என்ற இடத்தில் உள்ள பூங்கா ஒன்றில் 59 வயது நபர் ஒருவர் பேச்சுமூச்சின்றிக் கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்.
பொலிசார் அங்கு விரைந்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து பொலிசார் அந்த நபரின் வீட்டுக்குச் செல்ல அங்கு அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த வீட்டில், 57 வயதுடைய இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்கள்.
Credit: Getty
அந்த பூங்காவில் இறந்து கிடந்த நபர், முதலில் வீட்டிலிருந்த இரண்டு பெண்களையும், பின்னர் தோட்டத்தில் கிடந்த ஆணையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.