மாஸ்க் கட்டாயமா? மொத்த சுவிஸ் மக்களின் கருத்து இது தான்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுவிஸ் மக்கள் மாஸ்க் அணிந்து கொரோனா பரவலுக்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை முதல் பல இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை பெடரல் கவுன்சில் முன்னெடுத்த முடிவிலிருந்து மாஸ்க் இனி கட்டாயமில்லை என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், மாஸ்க் கட்டாயமல்ல என்ற முடிவுக்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், கால்வாசி சுவிஸ் மக்கள் மாஸ்க் இனி தேவை இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுவெளிகளிலும் பேருந்துகளிலும் மாஸ்க்கின் தேவை இல்லை என குறிப்பிட்டுள்ளனர். இதே போன்று இளையோர் சமூகமும் மாஸ்க் தேவை இல்லை என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் 14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 17% இளையோர், மாஸ்க் கட்டாயம் இல்லை என்பது இன்னும் கொஞ்சம் தாமதமாக முடிவெடுத்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான இளையோர் மாஸ்க் தேவை இல்லை என கருத்து தெரிவிக்க, பெரும்பாலான பெரியவர்கள் மாஸ்க் இன்னும் கொஞ்ச நாட்கள் கட்டாயம் தேவை என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கால்வாசி சுவிஸ் மக்கள் மாஸ்க் இனி தேவை இல்லை என கூற, எஞ்சிய மக்கள் மாஸ்க் தேவை என பதிலளித்துள்ளனர்.