சிக்ஸர் மழைபொழிந்த இலங்கை! அரைசதம் விளாசிய மூவர்..தத்தளிக்கும் நியூசிலாந்து அணி
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 290 ஓட்டங்கள் குவித்தது.
வாணவேடிக்கை காட்டிய நிசங்கா
ஆக்லாந்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னான்டோ (17) விரைவில் ஆட்டமிழக்க, நிசங்கா மற்றும் குசால் மெண்டிஸ் அதிரடியில் மிரட்டினர்.
குறிப்பாக சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய பதும் நிசங்கா 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 48 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
கமிந்து மெண்டிஸ் நிதானமான ஆட்டம்
அடுத்து வந்த அணித்தலைவர் அசலங்கா டக்அவுட் ஆகி வெளியேற, கமிந்து மெண்டிஸ் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார்.
அணியின் ஸ்கோர் 183 ஆக உயர்ந்தபோது, கமிந்து மெண்டிஸ் 46 (71) ஓட்டங்களில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் நிசங்கா 42 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய ஜனித் லியானகே (Janith Liyanage) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.
நியூசிலாந்து தடுமாற்றம்
இதன்மூலம் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 290 ஓட்டங்கள் குவித்தது. லியானகே 52 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்தார்.
மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளும், சாண்ட்னர் 2 விக்கெட்டுகளும், பிரேஸ்வெல் மற்றும் நாதன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 21 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. சாப்மேன் (16) மற்றும் பிரேஸ்வெல் (6) அணியை மீட்க போராடி வருகின்றனர்.
New Zealand in deep trouble at 21/5 after 7 overs! 👀
— Sportskeeda (@Sportskeeda) January 11, 2025
Three ducks and two single-digit scores leaving the Kiwis reeling 🇳🇿❌#NZvSL #ODIs #Cricket #Sportskeeda pic.twitter.com/7x5XwLjd6F
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |