துருவ் ஜுரேல் 141, சாய் சுதர்ஸன் 132..இந்திய அணி 452: பதிலடி கொடுக்கும் இலங்கை
காலியில் நடந்து அவரும் டெஸ்டில் இலங்கை, இந்தியா அணிகள் விளையாடி வருகின்றன.
டெஸ்ட் போட்டி
இந்தியா ஏ அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 452 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அணித்தலைவர் துருவ் ஜுரேல் (Dhruv Jurel) ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 132 ஓட்டங்களும் விளாசினர்.
இலங்கையின் தரப்பில் சமிக குணசேகரா 3 விக்கெட்டுகளும், திலும் சுதீரா 2 விக்கெட்டுகளும், ரவிந்து பெர்னாண்டோ ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மூவர் அரைசதம்
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினர்.
எனினும் நுவனிது பெர்னாண்டோ 84 ஓட்டங்களும், அஸ்ஹென் பாந்தரா 70 ஓட்டங்களும் குவித்து வெளியேறினர்.
அணித்தலைவர் சஹான் அரச்சிகே அரைசதம் அடித்தார். தற்போது வரை இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |