ஒரே டெஸ்டில் அறிமுகமான மூன்று இலங்கை வீரர்கள்!
காலேவில் தொடங்கிய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மூன்று இலங்கை வீரர்கள் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் விளையாட இருந்த தனஞ்சய டி சில்வா, அசித்த பெர்னாண்டோ மற்றும் ஜெஃப்ரி வான்டர்சே ஆகியோர் கோவிட்-19 தொற்று காரணமாக வெளியேறினர்.
இதனால் மாற்று வீரர்களாக இலங்கையின் கமிந்து மெண்டிஸ், மஹீஸ் தீக்ஷனா மற்றும் பிரபத் ஜெயசூரியா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இதில் தீக்ஷனா ஏற்கனவே 18 டி20 மற்றும் 9 ஒருநாள் போட்டிகளிலும், கமிந்து மெண்டிஸ் 5 டி20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். பிரபத் ஜெயசூரியா இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார்.
We've got 3 debutants today!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 8, 2022
Congratulations to Prabath Jayasuriya, Kamindu Mendis and Meheesh Theekshana!#SLvAUS pic.twitter.com/dODFVVmSmI