பிரித்தானியாவை உலுக்கிய மூன்று பிள்ளைகள் விவகாரம்... கொலை வழக்காக விசாரணை
பிரித்தானியாவின் ஸ்டெயின்ஸில் மூன்று பிள்ளைகளின் மரணம் தற்போது கொலை வழக்காக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சர்ரே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்காக பதிவு
ஆகஸ்டு 31ம் திகதி Bremer சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து மூன்று சகோதரர்கள் மற்றும் அவர்களின் தந்தை 31 வயதான Piotr Swiderski ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது மூன்று பிள்ளைகளின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சர்ரே பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் இன்னொருவர் தொடர்பிருப்பதாக தற்போதைய சூழலில் தாங்கள் கருதவில்லை என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மூன்று பிள்ளைகளை மொத்தமாக இழந்து தவிக்கும் அந்த தாயாருக்கு சிறப்பு அதிகாரிகள் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டதும் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
பெண் ஒருவரின் அலறல்
Piotr Swiderski மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, வழக்கு செப்டம்பர் 10ம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக அண்டை வீட்டில் குடியிருக்கும் Shehr Sikandari தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்கு பொலிசார் வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பகல் 12 மணியளவில் தாங்கள் உணவருந்தும் நிலையிலேயே அலறல் சத்தம் கேட்டதாக Shehr Sikandari குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |