மூன்று முறை உலகக்கோப்பை வென்ற ஜாம்பவானின் உடல்நிலை மேலும் மோசம்., மருத்துவமனையில் கவலைக்கிடம்

Brazil FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Ragavan Dec 29, 2022 08:21 AM GMT
Report

மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே, மருத்துவமனையில் அனுமஹிக்கப்பட்டு ஒரு மாதமாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தினர் சோகம்

82 வயதான பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே (Pele) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கியுள்ளதால், அவரும் அவரது குடும்பத்தினரும் சோகத்துடனும் விரக்தியுடனும் இருப்பதாக பீலேவின் மகள்களில் ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

பீலேவின் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் அவர் "சிறுநீரக மற்றும் இதய செயலிழப்பு" தொடர்பான "உயர்ந்த கவனிப்பில்" இருப்பதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறினர்.

மூன்று முறை உலகக்கோப்பை வென்ற ஜாம்பவானின் உடல்நிலை மேலும் மோசம்., மருத்துவமனையில் கவலைக்கிடம் | Three Time World Cup Winner Pele Hospital Critical

இதையடுத்து, பீலே நவம்பர் 29 அன்று சாவ் பாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரத்தில் மருத்துவமனை எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

அவர் மோசமான நிலையில் இருப்பதால், மற்ற குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையில் உள்ளனர்.

பீலேவின் மகன்

பீலேவின் மகன்களில் ஒருவரான எடின்ஹோ என்று அழைக்கப்படும் எட்சன் சோல்பி நாசிமெண்டோ, சனிக்கிழமையன்று அவரை பார்க்க வந்தார். கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றம் அவர், செவ்வாயன்று தெற்கு பிரேசில் நகரத்திற்கு திரும்பினார். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு தனது தந்தை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

பீலே எனும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோ

உலகளவில் பீலே என்று அழைக்கப்படும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோவுக்கு (Edson Arantes do Nascimento), செப்டம்பர் 2021-ல் பெருங்குடல் கட்டி அகற்றப்பட்டது. அது மற்ற உறுப்புகளுக்கு பரவியதா என்பதை அவரது குடும்பத்தினரோ அல்லது மருத்துவமனையோ குறிப்பிடவில்லை.

1958, 1962 மற்றும் 1970 உலகக் கோப்பைகளில் பிரேசிலை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பீலே, 77 கோல்கள் அடித்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். சமீபத்திய உலகக் கோப்பையின் போது பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்தார்.

மூன்று முறை உலகக்கோப்பை வென்ற ஜாம்பவானின் உடல்நிலை மேலும் மோசம்., மருத்துவமனையில் கவலைக்கிடம் | Three Time World Cup Winner Pele Hospital CriticalImago

அர்ஜென்டினா வென்ற கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை கல்ப்பந்தாட்ட போட்டியின் போது, ஜாம்பவான் பீலேவுக்கு பல அஞ்சலிகளும் விரைவில் குணமடைய வாழ்த்துகளும் குவிந்தன.  

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US