வெளிநாட்டு மாணவர்களுக்கு மூன்று மடங்கு கூடுதல் கல்விக்கட்டணம்: சுவிஸ் நாடாளுமன்றம் முடிவு
சுவிட்சர்லாந்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், சுவிஸ் மாணவர்களைவிட மூன்று மடங்கு கூடுதல் கல்விக்கட்டணம் செலுத்தவேண்டும் என சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
மூன்று மடங்கு கல்விக்கட்டணம்
சுவிட்சர்லாந்தின் Federal Institute of Technology Lausanne (EPFL) மற்றும் Federal technology institute ETH Zurichஇல் புதிதாக இணையும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இனி மூன்று மடங்கு அதிக கல்விக்கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
இந்த முடிவை நேற்று சுவிஸ் நாடாளுமன்றம் எடுத்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அடுத்து செனேட் முடிவு செய்ய உள்ளது.
Keystone / Georgios Kefalas
எதனால் இந்த முடிவு?
விடயம் என்னவென்றால், 2025-2028ஆம் ஆண்டுக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் கண்டுபிடிப்புக்கான திட்டத்தில், சுவிஸ் பெடரல் அரசு கல்விக்கான நிதியுதவியை பெருமளவில் குறைக்க திட்டமிட்டுவருகிறது.
ஆகவே, அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், சுவிஸ் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களிடம் மூன்று மடங்கு அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பது முதலான சில திட்டங்களை நாடாளுமன்றத்தின் துறைசார் கமிட்டி தீட்டிவருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் படிக்கும் சுவிஸ் மாணவ மாணவியர், சுவிட்சர்லாந்தில் படிக்கும் சுவிஸ் மற்றும் வெளிநாட்டு மாணவ மாணவியரைவிட 40 மடங்கு அதிக கல்விக்கட்டணம் செலுத்துவதாக சுவிஸ் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உலகிலேயே குறைவான கல்விக்கட்டணம் வசூலிக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று, சுவிட்சர்லாந்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவ மாணவியரின் கல்விக்கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரித்தால்கூட, சர்வதேச அளவில் பார்க்கும்போது, சுவிஸ் கல்விக்கட்டணங்கள் மிதமான அளவிலேயேதான் உள்ளன என்கிறார் சுவிஸ் கல்வி துறைசார் செய்தித்தொடர்பாளரான Katja Christ.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |