ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளம்பெண்கள்... பிரித்தானியாவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியில் இருந்து கடந்த 36 மணி நேரமாக மாயமாகியுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை முதல் மாயம்
நியூபோர்ட் பகுதியில் அமைந்துள்ள Muffler இரவு விடுதிக்கு சென்ற Sophie Russon(20), Eve Smith(21), மற்றும் Darcy Ross(21) ஆகியோரே வெள்ளிக்கிழமை முதல் மாயமாகியுள்ளனர்.
Credit: Facebook
இவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், இந்த மூன்று இளம்பெண்களுடன் இரு ஆண்களும் காணப்பட்டதாகவும், தற்போது அவர்களும் மாயமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவுக்கு பின்னர், அந்த மூன்று பெண்களும் தங்கள் சமூக ஊடக பக்கங்களை பயன்படுத்தவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மூவரின் புகைப்படத்தையும் இணையத்தில் பதிவிட்டு, பொதுமக்களின் உதவியை அந்த குடும்பங்கள் நாடியுள்ளது.
Credit: Facebook
இதனிடையே, Eve Smith பயன்படுத்திய கார் தற்போதும் Muffler இரவு விடுதியில் காணப்படுவதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு Muffler இரவு விடுதியில் இருந்து அந்த மூவரும் தொடர்புடைய இரு ஆண்களுடன் Trecco Bay சென்றுள்ளதாகவும், ஆனால் அங்கிருந்து அவர்கள் மாயமானதாகவே கூறப்படுகிறது.
விடுமுறை பூங்கா நிர்வாகம்
இந்த மூவரில் ஒருவர் கூட இதுவரை நண்பர்களையோ குடும்ப உறுப்பினர்களையோ தொடர்புகொள்ளவில்லை எனவும், இது பொதுவாக நடக்காத விடயம் என தெரிவித்துள்ளனர்.
Credit: Facebook
இதனிடையே, Trecco Bay விடுமுறை பூங்கா நிர்வாகம், ஐவர் மாயமான தகவல் தங்களுக்கும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், இதில் ஒருவர் கூட, கூறப்படும் நேரத்தில் பதிவு செய்யவில்லை எனவும், விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.