திடீரென சத்தமிட்ட நபர்... மருத்துவ உதவி தேவை என நினைத்த மக்கள்: பின்னர் தெரியவந்த உண்மை
இங்கிலாந்தில் வாழும் ஒரு தம்பதியர் திடீரென சத்தமிட, அக்கம்பக்கத்தில் வாழும் மக்கள், அவர்களுக்கு ஏதோ பிரச்சினை என்று எண்ணி அவசர மருத்துவ உதவியை அழைக்க முடிவு செய்துள்ளனர்.
உண்மை தெரிந்தபோது, அனைவரும் சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Image: National Lottery/SWNS
திடீரென சத்தமிட்ட நபர்...
இங்கிலாந்தின் பிரிஸ்டலில் வாழும் டான் கார்ட்டர் (Dan Carter, 39), தூக்கம் வராததால் மொபைலில் லொட்டரி ஆப்களைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.
மெதுவாக, ஒன்லைனில் விளையாடும் லொட்டரி விளையாட்டு ஒன்றை விளையாடிக்கொண்டிருக்க, திடீரென தனக்கு 100,000 பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளதாக செய்தி வரவே, சந்தோஷத்தில் சத்தமிட்டிருக்கிறார்.
Image: National Lottery/SWNS
தன் மனைவியாகிய கேய்லீயை (Kayleigh, 38) எழுப்பி விடயத்தைக் கூற, அவரும் சத்தமிட, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் டானுக்கு ஏதோ உடல் நலம் சரியில்லை என்று எண்ணியிருக்கிறார்கள்.
நண்பர்களை மொபைலில் அழைத்த டான் உற்சாகத்தில் உளற, அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து, ஆம்புலன்சை அழைக்கவா என கேட்டிருக்கிறார் ஒரு நண்பர்.
Image: National Lottery/SWNS
கணவன் உற்சாகத்தில் தடுமாறுவதைக் கண்ட கேய்லீ, அவரிடமிருந்து மொபைலை வாங்கி, அவருக்கு பிரச்சினை ஒன்றுமில்லை, எங்களுக்கு லொட்டரியில் 100,000 பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
நண்பர்கள் அனவரும் உடனே டான் வீட்டுக்கு ஓடி வர, அனைவரும் இரவு உடையிலேயே ஷாம்பேய்ன் அருந்தி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |