கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என எச்சரிக்கை
நடிகர் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது.
கமலுக்கு எச்சரிக்கை
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு பேசுகையில், "பல்வேறு கன்னட அமைப்புகள் கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்களை நாங்கள் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை செய்தோம். மேலும் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அவர் செய்தது தவறு என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்" என்றார்.
முன்னதாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக்லைஃப் படத்திற்கான 'புரோமோஷன்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய கமல், "தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது" என்றார்.
இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், "கன்னடம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது" என்று கமல் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |