துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை.
இப்படத்தின் மூலம் நடிகர் அபிநய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும், 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் மலையாளம் உள்ளிட்ட திரையுலகிலும் நடித்திருக்கிறார்.

இதுதவிர அஞ்சான், பையா, காக்கா முட்டை ஆகிய படங்களில் சில கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் 44 வயதாகும் அபிநய் உடல் நலம் பாதிக்கப்பட்டு படங்கள் வாய்ப்பில்லாததால் வருமானமின்றி வறுமையில் சிக்கினார்.
கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றி அடையாளம் தெரியாத அளவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று அதிகாலை நான்கு மணி அளவில் காலமானார்.
நடிகர் அபிநய்யின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |