இடி, மின்னல் உருவாவது எப்படி என தெரியுமா?
மழை வரும்போது இடி, மின்னல் வரும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும், பலமான சத்தத்துடன் இடியும், அதீத வெளிச்சத்துடன் மின்னலையும் பார்த்திருப்போம்.
ஆனால் அது எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
மின்னல்
பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்றானது மேலே சென்று குளிர்விக்கப்பட்டு நீர்த்திவலைகளாக சேர்ந்து அதாவது மேகங்கள் ஆகிறது.
மழைமேகத்தின் மையப்பகுதியில் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே இருக்கும், இந்நேர்வில் மழைமேகத்தின் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அயனிகளாக மாற்றம் அடைகின்றன.
இதில் எடை அதிகமான எதிர்மின் அயனி மழைமேகத்தின் அடிப்பகுதியிலும், எடை குறைவான நேர்மின் அயனி மழைமேகத்தின் மேற்பகுதியிலும் சேகரமாகும்.
இவ்வாறு அயனிகளின் சேகரம் அதிகமாகும்போது அவை எதிர் எதிர் மின்சுமை உடைய அயனிகளைக் கவர்வதான் மின்சாரம் உருவாகிறது, இதையே நாம் மின்னல் என்றழைக்கிறோம்.
இடி
மின்னல் உருவாகும் போது ஏற்படும் அதிகப்படியான வெப்பம் காற்றினை சூடாக்குகிறது, இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை போன்று ஆறுமடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த சூடான காற்று உடனடியாக குளிர்வதால் அதாவது ஆற்றல் மாற்றம் அடைவதாக அதிர்வினால் ஒலியாக வெளிப்படும், இதையே இடி என்கிறோம்.