10 மில்லியன் மதிப்புடைய பொருட்களை திருடி கால்சட்டைக்குள் மறைத்துவைத்திருந்த வெளிநாட்டவர்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சாலை ஒன்றில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், வெளிநாட்டு இளைஞர்கள் இருவரை சோதனையிட்டார்கள்.
அப்போது, அவர்கள் 10 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய பொருட்களை திருடி கால்சட்டைக்குள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
10 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய பொருட்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சாலை ஒன்றில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், 18 வயதுடைய இளைஞர்கள் இருவரை சோதனையிட்டுள்ளார்கள்.
அப்போது, அவர்களில் ஒருவர் ஒரு சாக்ஸுக்குள் ஏதோ சில பொருட்களை வைத்து தனது கால்சட்டையின் உள்பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்கள், அந்த சாக்ஸுக்குள் ரோலக்ஸ் கைக்கடிகாரம், நெக்லஸ்கள், கம்மல்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட மோதிரங்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தார்கள்.
அவற்றின் மதிப்பு 10 மில்லியன் யூரோக்கள் ஆகும். இலங்கை மதிப்பில் அது 3,53,03,00,000.00 ரூபாய்.
விசாரணையில், அவர்கள் இருவரும் துனிசியா நாட்டவர்கள் என்பதும், சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றிலிருந்து அந்த பொருட்களை அவர்கள் திருடியதும் தெரியவந்தது.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |