5 ஸ்டார் ஹொட்டலில் ஈவண்ட்டை முடித்துவிட்டு வாடகை காரில் சென்ற கோயம்புத்தூர் கோடீஸ்வரர்.., யார் அவர்?
கோயம்புத்தூரைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் 5 ஸ்டார் ஹொட்டலில் ஒரு நிகழ்வில் பங்கேற்று விட்டு வாடகை காரில் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் பேசப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் கோடீஸ்வரர்
தமிழக மாவட்டமான கோயம்புத்தூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏ வேலுமணி. இவர், இந்தியாவில் நோயறிதல் பரிசோதனை நிறுவனங்களுக்கு முன்னோடியாக தைரோகேர் நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தை ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கி லட்சக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை கொடுத்தார். முக்கியமாக இவர் தன்னுடைய எளிமையால் அனைவரையும் எளிதாக கவரக்கூடியவர் ஆவார்.
 
    
    400 நாட்கள் கொண்ட SBI FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
இந்நிலையில் இவர் 5 ஸ்டார் ஹொட்டலில் நிகழ்வு ஒன்றை முடித்துவிட்டு ஓலாவில் கார் புக் செய்து வீடு திரும்பியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "5 நட்சத்திர ஹொட்டலில் இரவு உணவினை முடித்து விட்டு 10.30 மணிக்கு ஓலா கார் புக் செய்து அதற்காக காத்திருந்தேன்.

அப்போது பலரும் என்னிடம் செல்ஃபி எடுக்க வற்புறுத்தினர் பணக்காரர்களின் அனைத்து உயர் ரக கார்களும் ஓலாவின் பின்னால் பொறுமையாக நின்று கொண்டிருந்தன. நான் OLA இல் அமர்ந்தபோது அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நீங்கள் உயரத்தில் இருக்கும் போது அமைதியாக இருக்க வேண்டும், சிக்கனமாக இருக்க வேண்டும், தாழ்மையுடன் இருக்க வேண்டும்.
EMI மூலம் நீங்கள் உயர் ரக கார்களை வாங்குவது செயற்கை உயர்வை பெறுகிறது. ஆனால் வாடகை காரில் செல்வது நிச்சயமாக உங்களுக்கு அமைதியை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
இவரின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு 4500 கோடி ரூபாய்க்கு தைரோகேர் நிறுவனத்தை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        